நாட்டில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளை புத்தாண்டுக்கு பின்னர் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை நேற்று சந்திக்க வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குற்றம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன.
புதுவருடத்தின் பின்னர் பாதாள உலக குழு நடவடிக்கையை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
இது குறித்து பொலிஸாரிடம் மிக பெரிய ஆற்றல் உள்ளது. குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக ஒரு சிறிய அளவு மட்டுமே வெளியிடப்பட்டது.
இதனை இரட்டிப்பாக்குதல் மற்றும் மும்மடங்காக அதிகரிப்பதன் மூலம் விரைவாக நாட்டை சீர்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.