வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இந்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலமாக 10,000 மெற்றிக்தொன் வெங்காய ஏற்றுமதிக்கு இலங்கைக்கு இந்தியா அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான விதி விலக்களித்ததன் மூலமாக இந்தியாவின் அண்டை நாட்டிற்கு முன்னுரிமை என்ற கொள்கையை இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. இது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மேலும் வலுச் சேர்க்கின்றது.