
Rasi Palan 22th February 2022: ராசிபலன் நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும் . உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். நிம்மதி உண்டாகும் நாள்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமாக நாள்.
கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
சிம்மம்: பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
கன்னி: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
துலாம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள்.
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனடியாக முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
தனுசு: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.
மகரம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சில தந்திரங்களை கற்றுக் கொள்வார்கள். இனிமையான நாள்.
கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள் உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மனசு மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மீனம்
மீனம்: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.