நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 240 சந்தேக நபர்களுடன் மொத்தம் 244 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் 104 கிராம் 705 மில்லிகிராம், ஐஸ் 58 கிராம் 324 மில்லிகிராம், கஞ்சா 191 கிராம் 165 மில்லிகிராம், மாவா 86 கிராம் 65 மில்லி கிராம், போதை மருந்துகள் 35 கிராம் 86 மில்லிகிராம் என கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 240 சந்தேக நபர்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 13 சந்தேக நபர்களும், அழைப்பாணையின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 11 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.