இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மற்றுமொரு தாதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அதன்படி, கொரோனா தொற்றினால் மரணமடைந்த நான்காவது தாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மினுவாங்கொட ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிவந்த இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி இந்து அமரசிங்க என்பவரே மரணமடைந்துள்ளனர்.
குறித்த வைத்தியசாலையின் 2ஆம் விடுதிப் பிரிவுக்குப் பொறுப்பாக பணியாற்றிவந்த இவர், சிறந்த சேவையாளராக வைத்தியசாலை நிர்வாகத்தால் போற்றப்பட்டுள்ளார்.





