சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன செவ்வாய்க்கிழமை (16) மாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தனது 92 வது வயதில் காலமானார்.
1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி காலி மாவட்டத்தின் உனவடுன பிரதேசத்தில் பிறந்த ஆரியரத்ன இலங்கை அரசியலிலும் சமூக அபிவிருத்தியிலும் தொடர்ச்சியான செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.