இசை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய தாய், 3 பிள்ளைகளுடன் எடுத்த விபரீத முடிவு

 

கம்பளை – மொரஹேன பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

38 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 16, 13 மற்றும் 10 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளுமே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கம்பளை, பன்விலதன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியை குறித்த நால்வரும் நேற்று முன்தினம் இரவு பார்வையிடச் சென்றுள்ளனர்.

இசை நிகழ்ச்சி முடிந்து நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்துள்ளனர். 

இதன் போது தொலைபேசி அழைப்பு தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த மனைவி அதிகாலை மூன்று மணியளவில் பூச்சி மருந்தை குடித்ததையடுத்து, மூன்று பிள்ளைகளும் அதே பூச்சி மருந்தை குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் காலை ஆறு மணியளவில் கணவரிடம் இதுபற்றி கூறியதையடுத்து அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

முதலில் பன்விலதன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் மூன்று மகன்கள் பின்னர் கம்பளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் புபுரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *