தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையானது தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலத்தில் (13, 14, 15) 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடுவ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு விடுமுறையின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த 13ஆம் திகதி 13 இலட்சம் ரூபாவும், 14ஆம் திகதி 16 இலட்சம் ரூபாவும், 15ஆம் திகதி 18 இலட்சம் ரூபாவும் வருமானமாகப் பெற்றுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.