மருத மடு அன்னை இன்று பிற்பகல் பருத்தித்துறை தொம்மை அப்பர் ஆலயத்தில்…!

மருதமடு அன்னை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திலிருந்து தற்போது பருத்தித்துறை முனை தொம்மை அப்பர் தேவாலயத்திற்க்கு வருகைதந்துள்ளார்.

பக்தர்களின் மிக பிரமாண்ட வரேற்புடன் மருத மடு அன்னை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திலிருந்து, பருத்தித்துறை துறைமுகம், பருத்தித்துறை நகர் ஊடக தும்பளை வீதிதால் வருகைதந்து நாலாம் குறுக்கு தெரு ஊடாக பருத்தித்துறை முனை  புனித தொம்மை அப்பர் ஆலயத்தை பிற்பகல் 6:00 மணியளவில் வந்தடைந்தார் மருத  மடு  அன்னை.

மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி வரும் வீதி எங்கும் பருத்தித்துறை நகரசபையினர் தமது பவுசர் மூலம்  தண்ணீர் தெளித்து வரவேற்றனர். 

மேலும் அத்துடன் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமர சிங்க தலமையில் பருத்தித்துறை போலீஸ் நிலைய போலீசார், சிறப்பு அதிரடி படையினர், இராணுவத்தினர் ஆகியோர்  பாதுகாப்பு, வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *