லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தை தோட்ட பிரிவில் தீ பிடிப்பு சம்பவம் ஒன்று அதிகாலை 02 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ பிடிப்பு சம்பவத்தில் கல்கந்தை தோட்டத்தில் இயங்கிய வரும் பிள்ளைகள் அபிவிருத்தி நிலையம் திடீர் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ பிடிப்பு சம்பவம் மின்சார ஒழுக்கு காரணமாகவே,அல்லது யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் குறித்த பிள்ளைகள் அபிவிருத்தி நிலையம் மக்கள் குடியிறுப்பு பகுதிக்கு அருகில் காணப்படுகிறது.
தீ பிடிப்பு இடம்பெற்ற சமயத்தில் பாரிய வெளிச்சமும் புகை நாற்றமும் வருவது உணர்ந்த அருகில் வசிக்கும் மக்கள் வீட்டு விட்டு வெளியில் பதறி கொண்டு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் இந்த தீ பிடிப்பு சம்பவத்தினால் பிள்ளைகள் அபிவிருத்தி நிலையத்தின் கூரை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப கல்வி கற்கும் சிறார்களின் புத்தகங்கள்,உபகரணங்கள் பல தீப்பிடித்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.