புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியும் எனவும் மின் கட்டணத்தை குறைப்பதே புதிய மின்சார சட்டமூலத்தின் நோக்கம் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் மின்சக்தி அமைச்சில் இன்று விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்கான இரண்டு வழிமுறைகளில் இரண்டாவதான நிர்வாகச் செலவைக் குறைப்பதனையே தற்போது மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
இந்த நிலையில், முறையான ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வின்றி இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.