சிங்கப்பூரை தளமாகக் கொண்டு விசேட பயிற்சி நிலையமொன்றை அமைப்பது தொடர்பாக சிங்கப்பூரின் Willing Heart நிறுவனத்திற்கும் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இடையில் நேற்று (18) கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த பயிற்சி நிலையம் மேற்படி நிறுவனத்தின் பூரண ஆதரவின் கீழ் நிறுவப்படவுள்ளதுடன், இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் நேரடி வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இந்த நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சிங்கப்பூர் தரப்பில் ஆராயப்பட்டது.
அங்கு தாதியர் துறையில் உள்ள தொழில்களுக்கு முதலில் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து பின்னர் ஏனைய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பான இல்லம் அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.