8 வயது மாணவன் நீரில் மூழ்கிப் பரிதாப மரணம்!

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ கட்டுபத மஹாவெவயில் பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குடும்பத்துடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவனே நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளார் என ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ, நல்லதரன்கட்டுவ, இலக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய தினேத் சத்சர என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

தாயின் சகோதரி, அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் அயலவர் ஆகியோருடன் நீராடுவதற்காகச் சென்றபோதே மேற்படி மாணவன் இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *