ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா எதிர்வரும் மேமாத முற்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா ஏற்கனவே கடந்த ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கைக்கான அவரது முதலாவது விஜயமாக அது அமைந்திருந்தது.
இவ்வருகைக்கான திகதி மற்றும் நோக்கம் என்பன பற்றிய தகவல்கள் இன்னமும் வெளிவராத போதிலும், இதன்போது விசேடமாக இலங்கையின் பொருளாதார மீட்சி, கடன்மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.