மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் இன்று(22) அதிகாலை 02 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை நிலைய மேல் மாடியில் மதுபான விற்பனை நிலையம் உரிமையாளர் தூங்கி கொண்டு இருந்த வேலையில் இன்று(22) அதிகாலை, மதுபான விற்பனை நிலையம் முன் பகுதியில் இருந்த இரும்பு கதவை உடைக்கும் சத்தம் கேட்டு மேல் மாடி பெல்கனி ஊடாக பார்த்த போது முகத்தை மூடிக் கொண்டு ஒருவர், அங்கு நிற்பதை கண்டு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்த போதும், திருட்டில் ஈடுபட்ட நபர் மதுபானசாலை உரிமையாளரின் வீட்டு கதவை வெளியே பூட்டி விட்டு தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார்இ சந்தேக நபரை தேடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் குடாமஸ்கெலிய பகுதியில் நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருக்கும் வீட்டார் அபாயக்குரல் எழுப்பிய நிலையில் திருட்டில் ஈடுபட்ட நபர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் சீ.சீ.டிவி கேமராக்களில் பதிவாகி உள்ள பதிவை கொண்டு திருட்டில் ஈடுபட்ட நபர் தொடர்பான விபரங்களை திரட்டி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.