யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த ரூபா 6 இலட்சம் பெறுமதியான மின் வயர்கள் திருடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று(22) பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட ரீதியில் றேஞ்சஸ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகளை மின்னொளியில் நடாத்தி வருகிறது.
குறித்த போட்டியானது தற்போது அரையிறுதி வரை வந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் வாரமளவில் இறுதிப் போட்டியை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்றையதினம் மைதானத்தில் மின்னொளிக்காக பொருத்தப்பட்டிருந்த மின் வயர்கள் களவாடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
களவாடப்பட்டுள்ள மின் வயர்களின் தற்போதைய சந்தைப் பெறுமதி சுமார் 6 லட்சம் ரூபா எனவும் றேஞ்சஸ் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.