
அரசு மொபைலுக்கு ரீலோட் செய்வது போன்று எரிபொருள் கொள்வனவில் ஈடுபடுகிறது என எதிர்க்கட்சி நாடாளமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆனால் எரிபொருள் கப்பல்களை துறைமுகத்தில் விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
நிதி அமைச்சர் சொல்கிறார் நிதியை விடுவிப்போம் என்று. மத்திய வங்கி சொல்கிறது வங்கி இருப்பை பாதுகாக்க வேண்டும் என்று. இந்த நிலையில் எரிபொருள் கப்பல்களுக்கு யார் நிதியை வழங்குவது.
மின் வெட்டு நேரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், ஐந்து மணித்தியாலங்கள் மின் வெட்டு இடம்பெறுகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எண்ணெய் இல்லை என்ற பதாகை தொங்க விடப்பட்டுள்ளது. இப்போது வரை ரீலோட் செய்வது போன்று அரசு எண்ணெய் வாங்குகிறது.- என்றார்.