ஜனாதிபதியிடம் நிதி வாங்கிய கூட்டமைப்பு எம்.பிக்கள்..! பொது வேட்பாளர் இரத்தாகும்..! ஈ.பி.டி.பி பகிரங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமிடம் அபிவிருத்திகென நிதி வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்குவார்கள் என நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயா துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்தது போன்று அரசியல் தீர்வுக்கும் தமிழ் தேசிய  கூட்டமைப்பினர் வருவார்கள் .

அபிவிருத்தி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும் அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் .

நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு தன்னுடன் இணைந்து பயணிப்பவர்களுக்கு மட்டும் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியிலிருந்து ஒதுக்கீட்டை செய்து கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் குறித்த கூற்றை ஏற்று தற்போது அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுள்ளனர்.

ஈ.பி.டி.பியினராகிய நாம் முன்னெடுத்தவரும் கோட்பாட்டையொத்த இவர்களது இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. இதேநேரம் அவர்கள் அபிவிருத்தி தொடர்பில் எடுத்த இந்த நிலைப்பாடு போன்று அரசியல் தீர்வு விடயத்திலும் எடுக்க வேண்டும்.

ஏனெனில் நாம் நாடாளுமன்ற ஜனநாயக அரசியலில் காலடியெடுத்து வைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து மக்களின் அவசிய தேவைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதனூடாக படிப்டியாக அரசியல் உரிமை குறித்து முன்னேற முடியும் என்று வலியுறுத்தி வந்திருந்திருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதேபோன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீளமுடியாதென்று கைவிடப்படும் நிலைக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை தீவை ஜனாதிபதி ரணில் பொறுப்பெடுத்ததையும் தமிழ் தேசிய கட்சிகள் பல்வேறு கருத்துகளை நலினமாக சொல்லி விமர்சித்து வந்திருந்தனர்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்டளிட்ட பலரால் ஜனாதிபதி ரணில் தேசியப் பட்டியல் உறுப்பினராக வந்தவர் என்றும் இவர் மக்களின் ஆணையுடன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படவில்லை என்றும் இவரால் ஒன்றும் செய்துவிட முடியாதென்றும் பல்வேறு கருத்துக்களை சொல்லி விமர்சித்து தமது அரசியலை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் இலங்கை அரசியல் சாசனப்படி அவரது தெரிவு முறைமை சரியானதாகவே இருக்கின்றது ஆனால் இதை நன்கு தெரிந்திருந்தும் ஜனாதிபதி ரணிலின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு வேண்டும் எனவும் அதை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இந்த நிதி ஒதுக்கீட்டு விடயத்திலே ஜனாதிபதி மிக தெளிவாக ஒன்றைச் சொல்லி இருக்கின்றார்.

அதாவது நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு தன்னுடன் சேர்ந்து இணைந்து பயணிப்பவர்களுக்கு மட்டும்  விசேட நிதியிலிருந்து ஒதுக்கீட்டை செய்து கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

 ஜனாதிபதியிடம் இணைந்து நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டுடன் தாமும் இணைந்து செயற்பட தமக்கும் அபிவிருத்திக்கான பங்கை தருமாறு கோரி பெற்றிருப்பது வரவேற்கக் கூடிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *