ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 05 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வாரம் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நாளை (24) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறுநாள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹபொல உயர்கல்வி உதவித்தொகை நிதிகுழு என்பன கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.