மடுமாதாவின் முடிசூட்டுவிழாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடுமாதா திருச்சொரூபம் ஊர்வலமாக கடந்த வாரம் யாழ் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்றையதினம்(24)காலை மருதமடு மாதாவின் திருச்சொரூபம் கிளிநொச்சியை வந்தடைந்தது.
கிளிநொச்சி அக்கராயன் ஆரோக்கியமாதா ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்ட மருதமடு மாதாவின் திருச்சொரூபத்தை அருட்தந்தை அல்பட் சேகர் தலைமையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், மாவட்டத்தின் பல பிரதேசங்களிற்கும் திருச்சொரூப பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஏராளமாள பக்தர்கள் கலந்துகொண்டு மடுமாதாவின் திருச்சொரூபத்தை வழிபட்டு தமது வேண்டுதல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.