மஸ்கெலியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் காயம்…!

வெளிநாட்டு உல்லாச பயணியொருவர் ஒருவர் சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் அந்த வாகனத்தில் மோதுண்ட இரண்டு பெண்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பில் உல்லாசப் பயணிகள் சென்ற கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரை மது போதையில் வாகனம் செலுத்திய உள்ளாரா என பரிசோதனை மேற்கொள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

இதேவேளை காயமடைந்த இரண்டு பெண்களில் ஒருவர் தற்போது கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 37, 40 வயது உடைய பெண்கள் எனவும், இவர்கள் இருவரும் வீதி ஓரத்தில் நின்று கொண்டு இருந்த வேளையில் அதி வேகமாக வந்த கார் மோதியதால் ஒரு பெண்ணின் கால் முறிந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மற்றைய பெண் சிறு காயங்களுடன் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *