
சென்ற 18.04.2024 இல் வெளிவந்த விடிவெள்ளி வாராந்த வெளியீட்டில் “ஜனாஸா எரிப்பு அரச மன்னிப்பா? ஆணைக்குழுவா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதனை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டு “காலத்திற்குத் தேவையான ஒரு விடயத்தை சமூகத்திற்கு முன் எடுத்து வைத்துள்ளீர்கள். இது சம்பந்தமாக நமது சமூகம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்து இவ்விடயத்ததை நூர்ந்து போக விடாது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே!” என்று பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.