கண்டி – ஹந்தானை பகுதியில் வீடொன்றில் விபச்சார விடுதியை நடத்திய குற்றச்சாட்டில் தாய், மகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபச்சார விடுதியை நடத்தி வந்த மகள் முகாமையாளராகவும் தாய் காசாளராகவும் செயற்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது .
இந்த விபசார விடுதி தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபசார விடுதி தொடர்பில் இரண்டு வாரங்களாக விசாரணைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5,000 ரூபாவிற்கு பெண்ணொருவரை கொள்வனவு செய்த போதே சந்தேகநபர்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.