காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்பனை..! தமிழர் பகுதியில் போராட்டத்தில் குதித்த மக்கள்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம் பெற்றது.

1972ம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில்  அப்போதைய பிரதியமைச்சராக செயற்பட்ட  மறைந்த மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத்தால் முத்து நகர் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டப்பட்டது.

1984ல் இலங்கை துறை முக அதிகார சபைக்கு  ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது துறை முக அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலியால்  வர்த்தமாணி அறிவித்தல் விடுக்கப்பட்டது.

ஆனால் அம் மக்களுக்கு இதுவரை காணி உரித்துப் பத்திரம் வழங்கப்படவில்லை எனவும் துறைமுக அதிகார சபையினர் தங்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இங்கு மூன்று விவசாய குளங்கள் காணப்படுகிறது. சுமார் 788 விவசாய நிலங்களும் காணப்படுகிறது.

200 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அன்ளாட ஜூவனோபாயமாக விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.

துறை முக அதிகார சபையினர் எங்கள் காணியை பெற்று இந்தியாவுக்கு தாரை வார்க்க பார்க்கின்றனர். இதனை அரசாங்கம் நிறுத்தி ஜனாதிபதி எங்களுக்காண காணிகளுக்கான உரித்து படிவங்களை வழங்க வேண்டும்.

விவசாய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *