மலை நாட்டு மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்று புதன்கிழமை (1) தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் மலை நாட்டு மக்களையும், அவர்களின் மொழி உரிமையையும் பாதுகாப்பேன்.
அவர்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை பெற்றுக் கொடுப்பேன். மலைய மக்களின் கிராமிய, நகர அபிவிருத்திக்கு நான் பொறுப்பு.
அவர்களின் மருத்துவ, கல்வி, சத்துணவு உரிமைகளை பாதுகாப்பேன். தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன்.
உங்களின் அரசியல், மத, கலாசார உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
அனைத்து நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக உழைத்த பெருந்தோட்ட மக்களுடன் மே தினக் கூட்டத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தமையை நான் பாக்கியமாக கருதுகின்றேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.