பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் மனித உடலால் அதிக அளவில் உணரக்கூடிய வெப்பம் நாளை (03) காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.