
சுகாதாரத் துறை ஊழியர்கள் எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார நிபுணர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 14 நாட்கள் கால அவகாசம் மார்ச் முதலாம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாக அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு சமர்ப்பித்த சம்பள முன்மொழிவு முரண்பாடுகளை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.