கத்தியால் குத்திய கணவன்; சிகிச்சை பெற்றுவந்த மனைவி உயிரிழப்பு..!

 

மொனராகலை – நக்கல பிரதேசத்தில் கணவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

டி.எம் இரேஷா என்ற 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாகச் சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி அன்று தனது மாமியாரையும் மனைவியையும் கத்தியால் தாக்கிய நிலையில், மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது காயமடைந்த மனைவி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவர் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மொனராகலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *