நாளைய வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (04) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பகுதிகளில் உள்ள மக்கள், நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு காரணமாக உஷ்ணப் பிடிப்புகள் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக அதிக களைப்பு போன்றவற்றை அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.