இலங்கையில் மாரடைப்பால் ஏற்படும் 100 சதவீத மரணங்கள்! 30-50 வயதுக்கு இடைப்பட்டோருக்கு எச்சரிக்கை

 

பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு காரணமாக 30-50 வயதுக்கு இடைப்பட்ட 100% மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார்.

இந்த தரவுகளின்படி, மாரடைப்பால் இறக்கும் போக்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிற்றில் வீக்கம், மயக்கம், வலிப்பு ஏற்பட்டால் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

30-50 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களும் நடுத்தர வயதினரும் மேற்குறிப்பிட்ட அவசரகால நிலைமைகளுடன் ஏற்படும் மாரடைப்புகளில் இருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டுமென பத்மேந்திர விஜேதிலக்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *