ஜூன் மாதம் முதல் மீண்டும் மின்கட்டத்தில் மாற்றம்..?

பொருளாதார நெருக்கடியின் பாதிப்பைத் தணிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு, மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.

மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தை கருத்தில் கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென  துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்மூலம் மக்களின் பொருளாதார சிரமங்களை ஓரளவுக்கு குறைக்க முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் மின்சார சபையின் திரட்சியான இலாபம் 6000 கோடி ரூபா எனவும், 

2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட 5100 கோடி ரூபாவையும் சேர்த்து 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை 8200 கோடி ரூபா இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை தற்போது மின்சாரக் கட்டணம் தொடர்பான வரைபை தயாரித்து வருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *