“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் அத்தனை வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனாதிபதித் தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் கூறியதாவது:-
“நாட்டு மக்கள் என் பக்கம் நிற்கும்போது வேட்பாளர்களைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். சகல வேட்பாளர்களுடனும் பகிரங்க விவாதம் நடத்தவும் நான் தயார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் பெருவாரியான அங்கீகாரம் எனக்குக் கிடைக்கும். நான் ஊழல், மோசடிகளைச் செய்யவில்லை. கொலைகளைச் செய்யவில்லை. எப்போதும் மக்களுக்காகவும், நீதிக்காகவுமே குரல் கொடுத்து வருகின்றேன்.” – என்றார்.