
நாளை மறுதினம் ஆளுநர் உரிய பதில் தராவிடின் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவர் இன்று உண்ணாவிரத்தை ஆரம்பித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட் ட இவர்கள் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விடயத்துக்கு நீதி வேண்டி,தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவுகளால் இன்று ,வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணா விரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
சிறையில் உள்ள மூவரும் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே நாம் இங்கு உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுள்ளோம்.
இதனை அடுத்து ஆளுநர் சூம் தொழில் நுட்பம் மூலம் எங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ,எம்முடன் கதைப்பதாக நேரம் ஒதுக்கியுள்ளார்.
அவரின் பதில் நம்பிக்கை தரவில்லை என்றால் நாம் தொடச்சியாக உண்ணாவிரத போராட்டதில் ஈடுபடுவோம் என்றனர்.