மரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பிள்ளைகளின் தந்தை மரணம்..! யாழில் துயரச் சம்பவம்

 

யாழ்ப்பாணம் புத்தூர்  மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் மரத்தில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய செல்லமுத்து சிவலிங்கம்  என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சிவன் கோவிலுக்கு அருகாமையில் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியபோதே அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.  

குறித்த நபர் உயிரிழந்த பின் அவரது சடலம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *