ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மகளிர் பிரிவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தொகுதிவாரியாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மகளிர் பிரிவுகளை வலுப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதிலும் கட்சியின் மகளிர் பிரிவுகளுக்கான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் நாட்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியீட்டக் கூடிய ஆற்றல் உண்டு என பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.