யாழ்.போதான வைத்தியசாலையை பற்றி தவறான பரப்புரைகளை நிறுத்துங்கள்! தனிநபர் கருத்துக்களால் பாதிக்கப்படும் ஏழை நோயாளர்கள்

அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் இணையப் பதிவுகளிலும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. அது நம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் செயல் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார்.

குறிப்பாக வைத்தியசாலையில் தினமும் நடக்கும் சம்பவங்களை இணையத்தளங்களில் நேரடியாக பதிவிடும் பொழுது வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் நம்பிக்கை குறையும்.

இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை நோயாளிகளேயாகும். இது ஒரு திட்டமிட்ட செயலாகவே கருதப்படவேண்டும்.

நாங்கள் தினமும் வைத்தியசாலையில் ஒழுக்க நெறிகளை பாதுகாத்து வருகின்றோம். தினமும் எத்தனை நோயாளிகள் வருகின்றார், இறக்கின்றார்கள் என்பதை பதிவிடுகின்றோம். குறிப்பாக தினமும் 8 தொடக்கம் 10 நோயாளிகள் இறக்கின்றார்கள். 

அவர்களின் இறப்புக்கான காரணம் எல்லாவற்றையும் மருத்துவ அடிப்படையில் ஆராய்ந்து வருகின்றோம்.

ஆகவே தனி மனிதர்கள் இதனை விழப்புச் செய்திகளாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும்  தற்போது நிலவும் வெப்பமான காலநிலையில் பெரும்பாலானவர்கள் நீரிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே போதியளவு நீர் ஆகாரங்களை எடுத்தல் வேண்டும். அத்தோடு அதிகரித்த வெப்பத்தால் சுவாச நோய், தோல் நோய்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்ளது. மேலும் மன அழுத்தமும் ஏற்படும் நிலையுள்ளது எனவும்  அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *