வெளிநாட்டிலிருந்து நத்தார் பரிசு..! பெண்ணிற்கு வந்த தொலைபேசி அழைப்பால் பறிபோன பணம்..!

காலி பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவருக்கு வெளிநாட்டிலிருந்து நத்தார்  பண பரிசு கிடைத்ததாகக் கூறி அவரிடம் இருந்து இரு தடவைகளில்  30,000, மற்றும் 56,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவை  பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் போது, கடந்த பெப்ரவரி மாதம் வெளிநாட்டிலிருந்து நத்தார்  பரிசு வந்ததாக அந்த பெண்ணிற்குச் சந்தேக நபர் அழைப்பு விடுத்துள்ளார். 

மீண்டும் சில நாட்களுக்கு அந்த பெண்ணுக்கு அழைப்பு விடுத்து பரிசாகக் கிடைத்துள்ள பணம் கருப்பு பணம் என கூறியுள்ளார்.

எனவே, கொடுத்துள்ள வங்கிக் கணக்கில் மேற்குறிப்பிட்ட பணத்தை வைப்பிலிட வேண்டும். 

இல்லையெனில் ‘கறுப்புப் பணம் வைத்திருந்ததற்காகச் சிறை செல்ல வேண்டியிருக்கும்’  என சந்தேக நபர் குறிப்பிடப்பட்டுள்ளார் . 

இதனையடுத்து இந்த பெண் பயந்து சந்தேக நபர் வழங்கிய வங்கிக் கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட்டுள்ளார். 

வைப்பிலிட்ட பிறகு  பரிசு பொருள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காததால் இந்த பெண் கடந்த பெப்ரவரி மாதம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். 

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரின் நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *