நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவும் வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் யாழில் தற்போது வெள்ளரிப்பழ விற்பனை சூடுபிடித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி, யாழ்ப்பாண நகர சந்தைப் பகுதிகளுக்கு அருகாமையில் வெள்ளரிப்பழங்களினை பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில் ஒரு வெள்ளரிப் பழத்தின் விலை தற்போது 300 முதல் 450 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.