தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கும் எனவும், செயற்கை இனிப்பு பானங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதே இதற்குக் காரணம் எனவும் கூறியுள்ளார்.
வெப்பமான காலநிலையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது மிகவும் முக்கியம் என்பதுடன், கடினமான செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், இயற்கையான பானங்களை தயாரித்து பருகுவது மிகவும் அவசியம், முடிந்தவரை குளிர்ந்த நீர், பல்வேறு வகையான பழச்சாறுகள் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது அவசியம்.
இதேவேளை, நாளொன்றுக்கு பல தடவைகள் குளிர்ந்த நீரால் உடலை நனைப்பது, ஆரோக்கியமான குழந்தைகளை முடிந்தவரை தண்ணீரில் வைத்திருப்பது அவசியம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.