யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் பத்திரகாளி கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

8 அடி 700 உஅ நீளமான கஞ்சா செடியியை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *