முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் திருமலையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்…!

எதிர்கால ஜனநாயக ரீதியான அரசியல் தொடர்பிலான திருகோணமலை மாவட்டத்துக்கான கலந்துரையாடல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (11) இடம் பெற்றது.

குறித்த கலந்தாலோசனையை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

“எதிர்கால சந்ததியினருக்கான போற்றத்தக்க நாடு” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் நல்லாட்சியை நோக்கிய பயணத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பாதை, நாட்டின் அரசியலமைப்பு, அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தெரிவு செய்ய வேண்டிய வழி உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் என பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன. 

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னாள்   மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள்  உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள்,  சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *