டயானாவுக்கு எதிராக ரூபவாஹினி வழக்கு

 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த அலைவரிசையில் நேரலை ஒளிபரப்புக்கு நேரம் ஒதுக்கியதன் பின்னர் அது தொடர்புடைய தொகையை செலுத்தத் தவறியதன் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறக்குறைய பத்து இலட்சம் ரூபாவை அவர் செலுத்தத் தவறிவிட்டதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

நிலுவைத் தொகையை வழங்குமாறு பலமுறை அவருக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் அவர் பணத்தினை செலுத்த தவறிவிட்டார்.

நவகமுவ பெரஹெராவை நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சியில் நேரத்தை ஒதுக்கியுள்ள அவர், அதற்கான செலவை தாமே தனிப்பட்ட முறையில் செலுத்துவதாக எழுத்துமூல அறிக்கையையும் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *