தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தீர்மானம் எடுக்க அவசரப்பட வேண்டாம்! – சம்பந்தன் வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட அனைத்து தரப்பிடமும் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் நீண்ட வரலாற்றை பார்க்கின்றபோது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்ற நிலைமைகள் உள்ளன.

இந்த நிலையில் தென்னிலங்கையின் தேசியக் கட்சிகள் தற்போது வரையில் உத்தியோகபூர்வமாக தங்களது ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புக்களைச் செய்யவில்லை.

அக்கட்சிகள் அவ்விதமான அறிவிப்புக்களை செய்வதற்கு முன்னதாக நாம் எமது நிலைப்பாட்டை முன்வைத்து வீணான குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

தென்னிலங்கைத் தலைவர்களில் யார் வேட்பாளர்? அவர்களின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடு என்ன? அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் என்ன  உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆழமான கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

அந்த வகையில், நாம் அனைத்து சூழல்களையும் ஆழமாக எமது கருமங்களை முன்னெடுக்க வேண்டும். அவசரப்பட்டு எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *