கொழும்பின் புறநகர் பகுதியான அடுக்குமாடி குடியிருப்பில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
சி பிரிவில் மேல் மாடியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அடுக்குமாடி குடியிருப்பு பழமையானது எனவும், சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாரிய ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.