பலஸ்தீன மக்களுக்காக இலங்கை அழுத்தம் கொடுக்க வேண்டும்..! வலியுறுத்தும் மஹிந்த

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பலஸ்தீன மக்கள் இன்று சொல்லெண்ணா துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தியமைக்கு நான் இந்த உயரிய சபைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

பலஸ்தீன இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஊடாக எம்மால் அந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடிந்தது.

இஸ்ரேலிய தாக்குதலினால் மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். கடந்தவாரத்தில் மாத்திரம் 50 லட்சம் பலஸ்தீன மக்கள் வெளியேறியுள்ளனர்.

பலஸ்தீன விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் நாடு என்ற ரீதியில் இலங்கையும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *