சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்..!

  

சுமார் 55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 55 வயதிற்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் போது யுத்தத்தில் உயிரிழந்த அல்லது முற்றாக அங்கவீனமடைந்த இராணுவத்தினருக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

ஆயுதப்படையினருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட இந்த நிவாரணம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *