அரச நிலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரின் ஹோட்டல்..! 14 பேர் அதிரடியாக கைது

 

தெஹிவளை கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள சோல் பீச் என்ற விருந்தகம், ஏற்கனவே பொலிஸாரால் தகர்க்கப்பட்ட நிலையில், குறித்த இடத்தில் மீண்டும் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத கட்டுமானத்தை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் சமர்பித்த வரிப்பத்திரம் போலியானது என கல்கிசை பிரிவு விசேட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களை நீதிமன்றம், மே 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அரசாங்க நில அளவை திணைக்களத்தின் அளவையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய குறித்த காணி அரசுக்கு சொந்தமான காணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தற்போது வெளிநாட்டில் இருந்து இயங்கி வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாசிக் என்பவருக்கு இந்த கட்டிடம் சொந்தமானது என சந்தேகிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம்  அது பொலிஸாரால் தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *