முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தலை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு பொலிஸார் தடையேற்படுத்திய நிலையில் அங்கு பரபரப்பான நிலை தோன்றியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் தின நிகழ்வுகள் கிழக்கு பல்கலை மாணவர்களால் இன்றையதினம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்நததுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடும் இன்று காலை முன்னெடுக்க தயாரான சமயம் அங்கு வந்த பொலிஸாரால் குறித்த நிகழ்வுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தடுக்கும் முகமாக ஏறாவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பதற்கு வைக்கப்பட்ட அடுப்பினை கால்களாலும் கற்றி அட்டகாசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
இதனை அடுத்து அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை தடுக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்தையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் அச்சத்தில் காணப்பட்டதுடன் அந்த இடத்தில அசாதாரண சூழ்நிலை காணப்பட்டத்தனை அவதானிக்க கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.