தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் 25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதான ஜனாதிபதி செயலகத்தின் உப காரியாலயங்கள் மாவட்ட ரீதியில் நிறுவப்பட்டு மக்களுக்கு சேவை வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
மக்கள் மாவட்ட ரீதியான காரியாலயங்களுக்குச் சென்று தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளக்கூடிய ஓர் பொறிமுறைமை உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் எந்தவொரு தலைவரும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்றியதில்லை.
தான் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே மக்களுக்கு சேவையாற்றத் தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.