'தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை'' சித்தார்த்தன் எம்.பி வலியுறுத்து…!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவது இன்றைய காலகட்டத்தின் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம்(30)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலாக இருந்தால் என்ன ஜனாதிபதி தேர்தலாக இருந்தால் என்ன அந்த காலத்திற்கு தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட்டு தொடர்ந்து  வந்த அரசாங்கங்கள் தான் விரும்பியபடி ஜனநாயகத்தை  மறுக்கின்ற செயற்பாட்டை  தொடர்ந்து  மேற்கொண்டு வருகின்றது .

எனவே, அமெரிக்க அரசியலமைப்பு போல இலங்கையிலும் தேர்தலை பிற்போடுகின்ற அதிகாரமற்ற அரசியலமைப்பு இங்கும் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது இங்கே ஜனநாயகம் சிறக்கும் .

பொதுவேட்பாளர் விடயத்தில் அது இன்றைய காலகட்டத்தின் தேவை என உண்ர்ந்து தமிழ் தரப்புக்கள், அனைவரையும் இயன்றவரை இணைத்து இந்த ஜனாதிபதி தேர்தலை ஒன்றுபடுத்த முடியும் என நாம் கூறிவருகின்றோம்.

 பொதுவேட்பாளர் ஒருவரை கொண்டு வருவதன் மூலம் சரியான நிலைப்பாட்டை எடுக்கூடிய அரசியல் சக்திகளுக்கும் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்து கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *